Google Search

Thursday, December 17, 2009

3. அறன் வலியுறுத்தல்-5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் - 35

Tamil Meaning:

பொறாமை, பேராசை , பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

English meaning :

Four ills eschew and virus reach,

Lust, anger, envy, evil-speech.

Sunday, November 22, 2009

3. அறன் வலியுறுத்தல்-4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற - 34

Tamil Meaning:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்;
மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

English Meaning:
In Spotless mind virtue is found
And not in show and swelling sound.

Sunday, November 1, 2009

3. அறன் வலியுறுத்தல்-3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல் - 33

Tamil meaning:

செய்யக் கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்

தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

vEnglish Meaning:

Perform good deeds as much you can

always and everywhere , O man

Tuesday, October 13, 2009

3. அறன் வலியுறுத்தல்-2

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Tamil Meaning:
நன்மைகளின் விலை நிலமாக இருக்கும் அறத்தைப் போல்
ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை;
அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

English Meanning:
virtue enhances joy and gain;
Forsaking it is fall and pain.

Thursday, October 1, 2009

3. அறன் வலியுறுத்தல்-1

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - 31

Tamil meaning:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத் தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

English meaning:
From virtue weal and wealth outflow;
What greater good can mankind know?